கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 17 March 2022 12:19 AM IST (Updated: 17 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், 
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 11-ந் தேதி மாலை பசுபதீஸ்வரர்-அம்பாள் ஆகியோர் நந்தி வாகனத்திலும், 12-ந் தேதி பூத வாகனத்திலும், 13-ந் தேதி ரிஷப வாகனத்திலும், 14-ந் தேதி திருக்கயிலாய வாகனத்திலும், 15-ந் தேதி யானை வாகனத்திலும் எழுந்தருளினர்.
திருக்கல்யாண நிகழ்ச்சி 
இந்தநிலையில், நேற்று காலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அலங்காரவல்லி சவுந்தரநாயகியுடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. அதன்பின்னர் பசுபதீஸ்வரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

Next Story