1 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி; நாளை முதல் செலுத்தப்படுகிறது

திருச்சி, மார்ச்.17-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 21 லட்சத்து 86 ஆயிரத்து 100 பேரில் 19 லட்சத்து 95 ஆயிரத்து 568 பேருக்கு (91.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 15 லட்சத்து 29 ஆயிரத்து 48 பேருக்கு (69.9 சதவீதம்) 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 26 ஆயிரத்து 400 சிறுவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 117 பேருக்கு முதல் தவணையும் (91.89 சதவீதம்), 79 ஆயிரத்து 99 பேருக்கு, 2-வது தவணை (62.57 சதவீதம்) தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரத்து 598 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்படவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் இன்று (நேற்று) மதியம் தான் வந்தது. இதனால் நாளை மறுநாள் (நாளை) முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெறும்.
திருச்சி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 19 ஆயிரத்து 86 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்பேவேக்ஸ் தடுப்பூசி 2 தவணைகளாக செலுத்தப்படும். முதல் தவணைக்கும் 2-வது தவணைக்கும் இடையில் 28 நாட்கள் கால இடைவெளியாகும் என்றனர்.

Related Tags :
Next Story