தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்களுக்கு கடந்த மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், வட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜவஹர் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் தென்னரசு, ஜார்ஜ், நடராஜன் ஆகியோர் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்து பேசினர். தொடர்ந்து சீர்காழி நெடுஞ்சாலை துறை உட் கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கு கடந்த மாதம் வழங்கவேண்டிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பணி முறிவு காலத்தை பணி காலமாக வரன்முறை செய்திட அரசாணை வரப்பட்ட நிலையில், இதுநாள் வரை போராட்ட காலத்திற்கான ஊதியத்தை வழங்காத கோட்ட பொறியாளர் கண்டித்தும், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சி. ஐ. டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பிச்சை பிள்ளை, ஜவகர், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story