மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 21-ந் தேதி நடக்கிறது.
கரூர்,
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வரும் விண்ணப்பதாரர்கள் தவறாது தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் வந்து தங்களது புகார்களை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story