கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருட முயன்ற 7 பேர் கைது
கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருட முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருதையான் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் அருகே சாலையோரம் வேனில் இருந்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மயில்வாகனம் மனைவி தெய்வகன்னி என்பவர் வரிசையில் நின்று உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தெய்வ கன்னி கழுத்தில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை காணவில்லை. இதனால், கூச்சலிட்டார். இதனை பார்த்ததும் நகையை திருடியவர்கள் நைசாக கீழே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். இதுகுறித்து தெய்வக்கன்னி அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார், தெய்வகன்னி பின்னால் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த ரவி மனைவி லீலா(வயது 35), சோமு மனைவி சிவம்மா (36), முரளி மனைவி மஞ்சுளா(40), திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டி மனைவி பழனியம்மாள்(45), ஓசூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி (42), கார்த்திக் மனைவி பொன்னாத்தாள் (36), சூர்யா மனைவி வெள்ளையம்மாள் (48) ஆகிய 7 பேர் கூட்டாகச் சேர்ந்து கூட்டத்தில் நகை திருட முயற்சித்தது தெரியவந்தது. இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story