‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 March 2022 12:52 AM IST (Updated: 17 March 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதம் அடைந்த சாலை

 கும்பகோணம் மாநகராட்சியில் மகளிர் கல்லூரியில் இருந்து மகாமக குளம் வரை உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனிமுத்து, கும்பகோணம்.

Next Story