சைபர் கிரைம் குற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வீரவநல்லூர் பள்ளியில் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு சங்கு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மாணவிகளுக்கு செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும்போது ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், விளையாடும்போது வரும் தேவை இல்லாத லிங்கை, கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினர். இணையதளம் மூலம் நிதி மோசடி, சமூக வலைதளங்களை எப்படி கையாளுவது, தனிப்பட்ட கொள்கை பற்றி சைபர் கிரைம் போலீசார் மாணவிகளிடம் கலந்துரையாடினர். பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும், மேலும் 1930 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கூறியும், அதுகுறித்து பள்ளி மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story