ஹிஜாப் அணிய தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஹிஜாப் அணிய தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 1:00 AM IST (Updated: 17 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் அணிய தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பெரம்பலூர்
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவருமான செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு, திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கராசு, பெரம்பலூர் மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்ராருல் ஹக் ரஷாதி, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது அபுதாஹிர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story