தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு பாராட்டு


தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 17 March 2022 1:08 AM IST (Updated: 17 March 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களை கலெக்டர் பாராட்டினார்

பெரம்பலூர்
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது சீனியர்களுக்கான தடகள போட்டிகள், 7-வது சீனியர், ஜூனியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி 12 தங்கப்பதக்கங்களையும், தலா 4 வெள்ளி, வெண்கல பதக்கங்களையும் குவித்து மாவட்டத்திற்கு பெருமை சோ்த்தனர்.
கலெக்டர் பாராட்டு
அவர்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பாராட்டினார். இதில், நீச்சல் போட்டிகளில் மங்களமேட்டை சேர்ந்த அம்பிகா 2 தங்கப் பதக்கங்களையும், மேலப்புலியூரை சேர்ந்த கலைச்செல்வன் நீச்சல் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும், விசுவக்குடியை சேர்ந்த ரமேஷ் குண்டு எறிதலில் தங்கப்பதக்கமும், குரும்பலூரை சேர்ந்த மீனா 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களிலும், குண்டு எறிதலில் தங்கப்பதக்களையும், பெரம்பலூரை சேர்ந்த கார்த்திக்ராஜா 500, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்களையும், பாடாலூரை சேர்ந்த சுகுமார் பளு தூக்குதலில் தங்கப்பதக்கமும் பெற்றனர்.
தேசிய அளவிலான போட்டி
மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் வருகிற 24-ந் தேதி ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களில் சுகுமாரை தவிர மற்ற அனைவரும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 
ஆனால், அவர்களோ தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள செல்ல பயண தொகை இல்லாமலும், சீருடை, காலணி இல்லாமலும் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story