அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மானூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
மானூர்:
மானூரில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்லை மானூர் யூனியன் அலுவலகம் வாசலில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், “உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்” என உறுதி அளித்தனர். அதன்படி மானூர் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை, உதவி கலெக்டர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். விழாவில் மானூர் தாசில்தார் சுப்பு, விவசாய சங்க தலைவர் முகம்மது இப்ராகிம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story