பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூருவில், பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
மங்களூரு:
கல்லூரி மாணவர் தற்கொலை
பெங்களூருவை சேர்ந்தவர் பரத் பாஸ்கர் (வயது 20). மங்களூரு அருகே உருவா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர் பின்னர் அதேபகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று தனது அறையில் பரத் பாஸ்கர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைபார்த்த தங்கும் விடுதி ஊழியர்கள் உருவா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்வர், பேராசிரியர் மீது குற்றம்சாட்டி...
தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் ‘என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. இறுதியாக நான் உங்களிடம் செல்போனில் பேச விரும்பினேன். ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. எனக்காக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளீர்கள். மீண்டும் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை.
ஏனென்றால் நான் படிக்கும் கல்லூரியில் படிப்பை விட பணத்தைதான் அதிகம் விரும்புகின்றனர். முறையாக பாடம் நடத்தப்படுவது இல்ைல. பேராசிரியர்கள் யாரும் வகுப்பு வருவது இல்லை. ஆனால் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்றால் கடுமையாக பேசுகின்றனர். பணத்தை குறியாக வைத்து செயல்படும் இந்த கல்லூரியில் என்னால் படிக்க முடியாது. இதனால் தற்கொலை முடிவை தேடி கொள்கிறேன். என்னுடைய சாவுக்கு கல்லூரி முதல்வர், பேராசிரியர்தான் காரணம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் உருவா போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story