நகரப்பஞ்சாயத்து, கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா
வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து, கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என இருபெரும் விழா காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழும தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர்கள் சுமங்கலி சமுத்திரவேலு, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி சேவா சங்க தலைவர் கு.தவமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர பஞ்சாயத்து தலைவர் பொறியியல் பட்டதாரியான லாவண்யா ராமேஸ்வரன் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கு பொதுமக்கள், தொழில்அதிபர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் நகர பஞ்சாயத்து தேர்தலில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து சமுதாய பெரியோர்களுக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
விழாவில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், வணிகவரித்துறை ஆணையாளர் மாசிலாமணி, வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுதா, அனைத்துக்கட்சி மற்றும் அனைத்து சமுதாய நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகர பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் ராமர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story