அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 17 March 2022 1:43 AM IST (Updated: 17 March 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட எசனை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்த திட்டங்கள், பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டதன் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலெக்டர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அரசின் மக்கள் நலத்திட்டங்களை தெரிந்து கொண்டனர்.


Next Story