அரசு கல்லூரிக்கு பாதை அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் நிலம் வழங்கிய சகோதரர்கள்


அரசு கல்லூரிக்கு பாதை அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் நிலம் வழங்கிய சகோதரர்கள்
x
தினத்தந்தி 17 March 2022 1:45 AM IST (Updated: 17 March 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு பாதை அமைக்க மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் சகோதரர்கள் நிலம் வழங்கினர்.

ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யால் அறிவிக்கப்பட்டு, அடுத்த ஆண்டே வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு 530 மாணவிகள் பயின்று வரும் நிலையில், அரசு மகளிர் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக 16 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு ரூ.13½ கோடியில் கட்டிடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடைேய அரசு மகளிர் கல்லூரி கட்டப்படவுள்ள இடத்துக்கு பாதை வசதி இல்லாததால், கட்டிட பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. 
இதையடுத்து ஆலங்குளம் தொழில் அதிபர்களான டி.பி.வி.கருணாகரராஜா, அவருடைய சகோதரர் டி.பி.வி.வைகுண்டராஜா ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடம் 48.5 செண்ட் நிலத்தை அரசுக்கு அளித்தனர். அவர்கள் நிலத்துக்கான ஆவணத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.

Next Story