வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 4 பேர் கைது


வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2022 1:49 AM IST (Updated: 17 March 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 4 பேர் சிக்கினர்.

கடையம்:
கடையம் அருகே கீழாம்பூர் மேல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (44), சுப்பையா மகன் சங்கர் (37), பச்சி மகன் முரசொலி செல்வம் (36) மற்றும் கீழாம்பூர் பாபநாசம் பிரதான சாலை ராமசாமி மகன் தங்கமணி (42) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜ், சங்கர், முரசொலி செல்வம் மற்றும் தங்கமணி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்கம், 110 கிராம் வெள்ளி நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.

Next Story