ஆண்டிமடம் அருகே மூதாட்டி கொலை


ஆண்டிமடம் அருகே மூதாட்டி கொலை
x
தினத்தந்தி 17 March 2022 2:09 AM IST (Updated: 17 March 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தாயி (வயது 75). இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. காத்தாயி தனது மகன் ரத்தினசபாபதியுடன் வசித்து வந்தார். ரத்தினசபாபதி, அணிக்குதிச்சான் கிராமத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். 
 காத்தாயி, தனக்கு சொந்தமான முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் பெரிய ஏரி அருகே உள்ள கடலை பயிரிட்ட வயலில் ஆடு, மாடுகள் மேய்கிறதா என்பதை தினமும் பார்க்க செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதேபோல் நேற்று காலையும் கடலை பயிரிட்ட வயலை பார்க்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு பெரிய ஏரி நீர்வரத்து ஓடையில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
 இதனை, அப்பகுதியில் ஆடு-மாடுகளை மேய்த்தவர்கள் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கிராம மக்களும், மூதாட்டியின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 அதன்பேரில், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியின் இரு காதுகளும் அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்து இருந்தது தெரிய வந்தது. அவர் அணிந்திருந்த ேதாடுகளை காணவில்லை.
ஆகவே, மூதாட்டி அணிந்திருந்த தோடுகளை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு மூதாட்டியை கொைல செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக மூதாட்டியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் ஒரு பவுன்  தோடுகள் அணிந்து இருந்ததாக தெரிவித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
 பின்னர், காத்தாயியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story