ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 17 March 2022 2:10 AM IST (Updated: 17 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:

மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

  சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூரில் ரம்பாபுரி மடம் உள்ளது. இங்கு மறைந்த மடாதிபதி ஸ்ரீரேணுகாச்சார்யாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் பசவராஜ் பொம்மையால் கலந்து கொள்ள முடியவில்லை. 

இதனால் அவருக்கு பதிலாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மறைந்த மடாதிபதி ரேணுகாச்சார்யாவின் பிறந்தநாள் விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

  ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை சகித்துகொள்ளாமல் சிலர் வேண்டுமென்று போராட்டம் நடத்தி பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கினர். 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் அதையும் மீறி போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அதைவிட்டுவிட்டு அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடகூடாது. ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.

  மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு அவர் பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் ரம்பாபுரி மடாதிபதி, பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story