கர்நாடகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
கர்நாடகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 41 ஆயிரத்து 97 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 145 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு நகரில் மட்டும் 2 பேர் இறந்தனர். 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 40 ஆயிரத்து 26 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். நேற்று 392 பேர் குணம் அடைந்தனர். 39 லட்சத்து 2 ஆயிரத்து 28 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 92 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 0.35 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.38 சதவீதமாகவும் உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story