பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விளாகம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சத்யராஜ் (30). இவர் 21 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரை வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து அப்பெண் தப்பி வந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை அந்த பெண் பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கீழப்பழூவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை கைதுசெய்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story