காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
தாமரைக்குளம்
உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துகிருஷ்ணன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி மற்றும் டாக்டர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story