மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை


மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 17 March 2022 2:31 AM IST (Updated: 17 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. நேற்று 2-வது நாளாக புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துளளது. அதேநேரத்தில், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 354 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 581 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்னும் 11 பேர் மட்டுமே கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story