எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது


எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 March 2022 2:31 AM IST (Updated: 17 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது. அதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

சேலம்:-
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது. அதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
எல்லைப்பிடாரியம்மன்
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்திபெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 22-ந் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது.
இதைதொடர்ந்து 29-ந் தேதி மாவிளக்கு ஊர்வலம், 30-ந் தேதி அலகு குத்துதல், பொங்கல் வைத்து வழிபாடு, 31-ந் தேதி தீமிதி விழா, வருகிற 1-ந் தேதி பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முகூர்த்தக்கால் நடப்பட்டது
விழாவையொட்டி நேற்று கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. விழாக்குழு தலைவரும், மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலருமான சாந்தமூர்த்தி தலைமையில் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் எண்ணப்பட்டன
இந்தநிலையில் இந்துஅறநிலையத்துறை உதவி ஆணையாளர் குமரேசன் முன்னிலையில் நேற்று கோவிலில் உள்ள 2 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கையாக ரூ.9 லட்சமும், 50 கிராம் தங்கமும், 30 கிராம் வெள்ளியும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story