அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 2:31 AM IST (Updated: 17 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு போக்குவரத்து கழகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:-
ேசலம் மண்டல அரசு போக்குவரத்து கழக ெபாது ேமலாளர் அலுவலகம் சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் சித்ரா, பாலசுப்பிரமணியம், தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார், நல்லப்பன், பாலு, கந்தசாமி, சித்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story