ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்


ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 2:31 AM IST (Updated: 17 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக போராடிய கிராம பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், துளாரங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊர் முக்கியஸ்தர் சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.


Next Story