சேலம் வழியாக செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு


சேலம் வழியாக செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 17 March 2022 2:40 AM IST (Updated: 17 March 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சூரமங்கலம்:-
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கும் நடைமுறையை மீண்டும் படிப்படியாக ரெயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி சேலம் வழியாக செல்லும், சேலம்-சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22154), சென்னை எழும்பூர்-சேலம் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22153),  ஈரோடு-சென்னை சென்டிரல் ஏற்காடு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22650), சென்னை சென்டிரல்-ஈரோடு ஏற்காடு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22649) ஆகிய ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கும் நடைமுறை நேற்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story