‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 March 2022 2:43 AM IST (Updated: 17 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஓடையை சுத்தம் செய்ய வேண்டும்
கோபி மேட்டுவளவு பகுதியில் கீரிப்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் அதிகமாக படர்ந்து உள்ளன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓடையில் உள்ள செடி, கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி சுத்தம் செய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.

குடிநீர் தட்டுப்பாடு
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதிக்கு உள்பட்ட வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக குடிநீர் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வடக்குப்பேட்டை. 

சாலை சீரமைக்கப்படுமா?
ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி பகுதி நகர்நல சுகாதார மையம் (மருத்துவமனை) செல்வம் நகர் பகுதியில் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பழையபாளையம் சுத்தானந்தன் நகர் பகுதியில் இருந்தும் பெருந்துறை ரோடு செல்வம் நகர் பகுதி வழியாகவும் செல்ல சாலை உள்ளது. ஆனால் இந்த சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
குமரேஷ், ஈரோடு.


குவிந்து கிடக்கும் குப்பை
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தையொட்டி பாரியூர் செல்லும் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.


குண்டும், குழியுமான சாலை
தாளவாடியை அடுத்த மல்லன்குழி ஊராட்சியில் உள்ள கிராமம் சூசைபுரம். இங்கிருந்து பீம்ராஜ் நகர் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை இயக்குவதில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே புதிதாக தார் சாலை போட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சூசைபுரம்.

வீணாகும் குடிநீர்
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகில் குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த இந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விவேக், ஈரோடு.

பாராட்டு
ஈரோடு மணிக்கூண்டு அருகே கிழக்கு அனுமந்தராயன் வீதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் கிழக்கு அனுமந்தராயன் வீதிக்கு வந்து குழி தோண்டி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், சரி செய்த நகராட்சி நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.  
திருநாவுக்கரசு, ஈரோடு.

Next Story