பட்டா மாறுதல் சிறப்பு முகாம்


பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 17 March 2022 2:53 AM IST (Updated: 17 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காரியாபட்டி, 
காரியாபட்டி தாலுகா, கம்பிக்குடி ஊராட்சி, மந்திரி ஓடை கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் தாசில்தார் தனக்குமார் தலைமையிலும், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த பட்டா மாறுதல் முகாமில் 11 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 7 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1 மனு நிலுவையில் உள்ளது. மேலும் இந்த பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பட்டா மாறுதல் உத்தரவு, முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவுகளை தாசில்தார் தனக்குமார் வழங்கினார். முகாமில் காரியாபட்டி வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கம்பிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பாலு, கம்பிக்குடி கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Next Story