நம்பியூர் அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
நம்பியூர் அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய இளைய மகள் மலர் (வயது 19). இவர் கோபியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று சீனிவாசன் மலரிடம், நானும், உன்னுடைய தாயும் பர்கூரில் எனது சித்தப்பா வீட்டு திருமணத்துக்கு செல்கிறோம். எனவே நீ பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டாம். எங்களுடன் வா என்று கூறியுள்ளார். இதனால் மலர் கோபித்துகொண்டார். பின்னர் சீனிவாசனும், அவருடைய மனைவியும் பர்கூருக்கு சென்றுவிட்டனர்.
வீட்டில் இருந்த மலர் சேலையால் மரச்சட்டத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் வாகனம் மூலம் கோட்டுபுள்ளாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மலர் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story