44 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை


44 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
x
தினத்தந்தி 17 March 2022 3:13 AM IST (Updated: 17 March 2022 3:13 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே நடைபெற்ற முகாமில் 44 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

சாத்தூர், 
சாத்தூர் தாலுகா புதுச்சூரங்குடி, நடுச்சூரங்குடி, கண்மாய்சூரங்குடி, கே.மீனாட்சிபுரம், ஸ்ரீரெங்கபுரம் ஆகிய கிராமங்கள் அடங்கிய சூரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் மற்றும் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலாகடற்கரைராஜ் தலைமை தாங்கினர். கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 78 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 44 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு பட்டா மாறுதலுக்கான ஆணையும், முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவும் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன், வருவாய் ஆய்வாளர் மாதவி, கிராம நிர்வாக அலுவலர் ராமஜெயம் மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேஷ் செய்திருந்தார். 


Next Story