வன சோதனை சாவடியை முற்றுகையிட்ட31 பேர் கைது


வன சோதனை சாவடியை முற்றுகையிட்ட31 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2022 4:11 AM IST (Updated: 17 March 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

தடிக்காரன்கோணத்தில் வன சோதனை சாவடியை முற்றுகையிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

அழகியபாண்டியபுரம்:
தடிக்காரன்கோணத்தில்வன சோதனை சாவடியை முற்றுகையிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடிக்காரன்கோணம் சந்திப்பில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் வாலிபர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், அங்கு விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்காகவும் வனத்துறை சார்பில் அந்த இடத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போடப்பட்ட கம்பி வேலி முழுவதையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலையில் மாவட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெயராம் தலைமையில் பொதுமக்கள் தடிக்காரன்கோணம் சந்திப்பில் உள்ள வன சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். இதில் தோவாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மேரி ஜாய், தடிக்காரன்கோணம் வார்டு உறுப்பினர்கள் அஜன், ராஜேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உதா ஜெயராம், அ.தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலர் மனாசிர் ஹலிமா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரையும் கைது செய்தனர்.
---


Next Story