ஆழ்வார்திருநகரியில் பங்குனி திருவிழா தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வியாழக்கிழமை பங்குனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கடந்த 9-ந்தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பொலிந்துநின்றபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிப் புறப்பாடு நடைபெற்றது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் சிறப்பு பூஜையுடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேர் புறப்பட்டது. மேலரத வீதியில் புறப்பட்ட தேர் வடக்கு ரதவீதி வழியாக கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் மேல ரத வீதியில் தேர் நிலைக்கு வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோபால என்ற கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story