நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்


நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 17 March 2022 5:10 PM IST (Updated: 17 March 2022 5:10 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்

மோகனூர்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார துறை சார்பில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்கினார். மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தனலட்சுமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குடற்புழு நீக்க மாத்திரை உண்பதன் அவசியம் குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பேசினார். இதில் லத்துவாடி கிராம சுகாதார செவிலியர் சத்தியபாமா, மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி ரெட்கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story