ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்செந்தூர்:
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்ப பெறும் வசதிகளை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும், எம்.டி. இந்தியா பிரைவேட் லிமிடெட் மறுப்பதையும், காலம் தாழ்த்துவதையும் கண்டித்து திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்பாக்குட்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டாக்டர் கலியூர் ரஹ்மான், மாவட்ட துணை தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், திருச்செந்தூர் வட்டார செயலாளர் பாலசிங் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் அப்துல் ஜாபர், சாத்தான்குளம் வட்டார செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்யாணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story