பூப்பல்லக்கில் மாரியம்மன் விடிய, விடிய நகர்வலம்
நிலக்கோட்டையில் பூப்பல்லக்கில் மாரியம்மன் விடிய, விடிய நகர்வலம் நிகழ்ச்சி நடந்தது.
நிலக்கோட்டை:
மாரியம்மன் கோவில்
நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 12 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் அமர்ந்து கோவில் வளாகத்தில் தொடங்கி சேர்மன் பஜார், நால்ரோடு, நடராஜபுரம், மெயின் பஜார் மற்றும் பெரிய காளியம்மன் கோவில் பகுதி என நகரின் பல்வேறு வீதிகளில் விடிய, விடிய நகர்வலம் வந்து கோவிலை அடையும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்கள் வழி நெடுக திரளாக நின்று தேங்காய், பழத்துடன் திருக்கணம் சாற்றி அம்மனை வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் திரண்டனர்
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நிலக்கோட்டையில் ஆங்காங்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் திண்டுக்கல், மதுரை, கோவை, சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் நிலக்கோட்டை பேரூராட்சி சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில் இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், காரியதரிசிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலை பாண்டியன், நிலக்கோட்டை வர்த்தகர் சங்க தலைவர் பிரபாகரன், மு.வ.மாணிக்கம் அன்கோ உரிமையாளர் ஸ்ரீதர், மு.வ.அமுல்ராஜ் அன்கோ உரிமையாளர் அசோக், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், துணை தலைவர் முருகேசன், செயல்அலுவலர் சுந்தரி, நிலக்கோட்டை பேரூராட்சி அ.தி.மு.க. நகர செயலாளர் சேகர், நிலக்கோட்டை தட்சணமாற நாடார் உறவின்முறை தலைவர் பிரமானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலுடன் முடிவடைகிறது.
Related Tags :
Next Story