தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்


தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 March 2022 6:00 PM IST (Updated: 17 March 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடமலைக்குண்டு:

மேகமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. தற்போது சுட்டெரிக்கும் வெயில் வாட்டுவதால் வனப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் குளங்கள் வறண்டு விட்டன. இதனால் தண்ணீரைத்தேடி வேறு பகுதிகளுக்கு வனவிலங்குகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுத்து வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள  தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் மேகமலை வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மஞ்சனூத்து பகுதியில் உள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீரை நிரம்பினர். 

இந்த பணியை, வனச்சரகர் சதீஷ்கண்ணன்  ஆய்வு செய்தார். அப்போது வனவிலங்குகள் எளிதாக வந்து செல்லும் வகையில், தண்ணீர் ெதாட்டிகளை சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபட்டு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story