விவசாயிகள் அரிவாளால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு
பொதுக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிகள் அரிவாளால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு
வாணாபுரம்
வாணாபுரம் அருகே உள்ள சாதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 65). அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (49). இருவரும் விவசாயிகள்.
இருவருக்கும் இடையே பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டி, அரிவாளால் வெட்டிக்கொண்டதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வாணாபுரம் போலீசில் புகார் செய்தனர்.
அதில் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் கந்தன், கோவிந்தசாமி, தினகரன், ராம்குமார், ஜெயலட்சுமி, அசோதை, ஆர்த்தி ஆகியோரும், கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் உலகநாதன், ரங்கநாதன், தனலட்சுமி, தனம் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story