காரில் வந்து மோட்டார்சைக்கிள் திருடிய கும்பல்
குடியாத்தத்தில் காரில் வந்து மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் காரில் வந்து மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வந்து திருட்டு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் முன் நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப் போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாகன உரிமையாளர்கள் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
இன்று காலையில் மோட்டார் சைக்கிளை காணவில்லை. அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது காரில் வந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய கோரிக்கை
குடியாத்தத்தில் முக்கியமான பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.
ஆனால் தற்போது சில மாதங்களாக 20-க்கும் குறைவாகவே கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதாகவும், முக்கியமான இடங்களில் உள்ள கேமராக்கள் இயங்குவது இல்லை எனவும் கூறப்படுகிறது.
இது குற்றவாளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒரு சில தினங்களிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டு நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளே காரணமாக இருந்தது. எனவே செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story