கந்திலி ஒன்றியத்தில் பதிவேடுகளை சரியாக பராமரிக்காத பணித்தள பொறுப்பாளர் பணியிடைநீக்கம்


கந்திலி ஒன்றியத்தில் பதிவேடுகளை சரியாக பராமரிக்காத பணித்தள பொறுப்பாளர் பணியிடைநீக்கம்
x
தினத்தந்தி 17 March 2022 6:43 PM IST (Updated: 17 March 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

கந்திலி ஒன்றியத்தில் பதிவேடுகளை சரியாக பராமரிக்காத பணித்தள பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியத்தில் பதிவேடுகளை சரியாக பராமரிக்காத பணித்தள பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

கந்திலி ஊராட்சி ஒன்றியம் மானவள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ ரூ.8.54 லட்சத்தில் நீர் உறிஞ்சும் அகழி மற்றும் பண்ணை குட்டை அமைக்கும் பணி, பெரியகரம் புதூர் ஊராட்சியில் ரூ.6.44 லட்சத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணி, ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.36 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுசுவர் அமைக்கும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வுசெய்தர்.

அப்போது பணித்தள பொறுப்பாளர் சுகுணா பணிப் பதிவேடுகளை சரிவர பராமரிக்காத காரணத்தினால் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கசிநாயக்கம்பட்டி ஊராட்சியில் ரேஷன் கடையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை மற்றும் தரம் சரியாக இருக்கின்றதா என்றும், அங்கிருந்த பொதுமக்களிடம் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றதா என்றும் கேட்டறிந்தார். 

பாடம் நடத்தினார்

எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ரூ.8.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுசுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஆங்கில பாடம் நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஆதியூர் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தையும், ரூ.1.53 லட்சத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது செயற்பொறியாளர் மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் ரூபேஷ் குமார், கந்திலி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சித்ரகலா, கலீல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

Next Story