தேசிய நெடுஞ்சாலை பாலங்களில் ஓவியங்கள் வரையும் பணி தீவிரம்
போஸ்டர் ஒட்டுவதை தடுத்து அழகுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை பாலங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
வேலூர்
போஸ்டர் ஒட்டுவதை தடுத்து அழகுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை பாலங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.
போஸ்டர்
வேலூர் மாநகரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் அலுமேலுமங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம் மற்றும் கொணவட்டம் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளன.
இந்த மேம்பால பக்கவாட்டு சுவர்களில் விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சியினரின் பிறந்த நாள், நினைவு நாள் போஸ்டரை ஒட்டி வந்தனர்.
அவ்வப்போது போஸ்டர்களை அகற்றினாலும் மீண்டும் அங்கு போஸ்டர் ஒட்டுவது வாடிக்கையாகி வந்தது.
இதற்கு மாற்று தீர்வாக 6 முக்கிய மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ஓவியங்கள் வரையும்பணி
அதன்படி வேலூர் நகரம் புதுப்பொலிவு பெறும் வகையில் மாவட்டத்தின் பெருமை, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையவும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் ஓவியங்கள் வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மேம்பாலத்தில் இன்று இயற்கை காட்சியுடன் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியது.
மற்ற பாலங்களிலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதன்மூலம் வேலூரில் உள்ள மேம்பால பகுதிகள் அழகாக மாறி வருகின்றன.
இந்த ஓவியங்கள் மீது எந்தவிதமான போஸ்டர்களையும் ஒட்டக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வேலூர் மாநகர பகுதியில் உள்ள மேம்பால சுவர்களில் விளம்பரங்கள் எழுதவும், நோட்டீஸ் ஒட்டவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story