அரசு பஸ் மீது கிரேன் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு
காட்பாடியில் அரசு பஸ் மீது கிரேன் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு
வேலூர்
வேலூரில் இருந்து பரதாமி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று இன்று காலை சென்றது. பஸ்சில் பயணிகள் ஏராளமானோர் இருந்தனர்.
காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிக்னலில் காலை 8.30 மணிக்கு டவுன் பஸ் வந்து நின்றது.
அப்போது அங்கு கிரேன் வாகனம் ஒன்று வந்தது. திடீரென கிரேனின் முன்பக்க கம்பி அரசு டவுன் பஸ் மீது உரசியது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்தால் சித்தூர் பஸ் நிறுத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய கிரேன் மற்றும் அரசு டவுன் பஸ்சை அப்புறப்படுத்திய பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.
இந்த திடீர் விபத்து அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story