டிரைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
தூத்துக்குடியில் ஆரம்பசுகாதார நிலைய டிரைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் ரத்தினசாமி (வயது 38). இவர் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15-ந் தேதி மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடன் சேர்ந்து மது குடித்த மகேஷ், முத்துக்குமார், முகமது காசிம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டேனியல்ராஜ் என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தாளமுத்துநகர் போலீசார் நேற்று டேனில்ராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story