குடோன் மற்றும் லாரியில் பதுக்கி வைத்த 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


குடோன் மற்றும் லாரியில் பதுக்கி வைத்த 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2022 8:10 PM IST (Updated: 17 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே குடோன் மற்றும் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூர் அருகே குடோன் மற்றும் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூர் பிரசாந்த்நகரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் இன்று அந்த பகுதியில் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் லாரி ஒன்று நின்றது. அதை போலீசார் சோதனை செய்தபோது, அதில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அதன் அருகே குடோனும் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் குடோனையும் சோதனை செய்தனர். 

அங்கும் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 475 மூட்டைகளில் 24 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் ரேஷன் அரிசியை கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. 

மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக குடோன் உரிமையாளர் மோட்டூரை சேர்ந்த தனபால் (வயது 55), காகிதப்பட்டறையைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்தி (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி மூட்டைகளில் ஒரு மூட்டை கோதுமையும் இருந்தது. அதையும், ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story