தாலிகட்டிய சிலமணி நேரத்தில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்


தாலிகட்டிய சிலமணி நேரத்தில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 8:15 PM IST (Updated: 17 March 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே தாலிகட்டிய சிலமணிநேரத்தில் இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

வேலூர்

வேலூர் அருகே தாலிகட்டிய சிலமணிநேரத்தில் இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

திருமணம்

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

 இவருக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

கடந்த 14-ந் தேதி காலை இளம்பெண்ணுக்கு, நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

 இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

காதலனுடன் ஓட்டம்

அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் தனது காதலனுடன் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

 இதையடுத்து அவரது பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே புதுப்ெபண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story