திண்டுக்கல்லுக்கு புறப்பட்ட சவுந்தரராஜ பெருமாள்
பங்குனி திருவிழாவையொட்டி வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு வந்தார்.
வடமதுரை:
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை பெருமாளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பல்லக்கில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.
பின்னர் இன்று இரவு முள்ளிப்பாடியில் தங்கினார். நாளை (வெள்ளிக்கிழமை) சவுந்தரராஜ பெருமாள் முள்ளிப்பாடி சந்தானவர்த்தினி ஆற்றில் இறங்கி, ராமதேவ மகரிஷிக்கு வரமளித்து, இரவு புஷ்ப விமானத்தில் புறப்பட்டு, மேட்டுராஜக்காபட்டியில் தங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 20-ந்தேதி திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி, நாகல் நகர், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குதிரை, கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி என்.ஜி.ஓ. காலனியில் இருந்து புறப்பாடாகி, மறுநாள் வடமதுரைக்கு வந்தடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசெல்வம், செயல்அலுவலர் மாலதி, மண்டகப்படி தாரர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story