திருச்செந்தூர் கோவிலில் விஜய பிரபாகரன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தார்
திருச்செந்தூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட தே.மு.தி.க.வை வலுப்படுத்தி பலப்படுத்துவோம். வெற்றி, தோல்வி என்பது அனைத்திலும் உண்டு. 10 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்று வீழ்ந்துள்ளது. தே.மு.தி.கவை எழுச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். நிச்சயமாக சாதிப்போம்’ என்றார்.
Related Tags :
Next Story