ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள்
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தது.
ஊட்டி
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தது.
அரசு மருத்துவக்கல்லூரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நடப்பாண்டில் 150 மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியதால் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடையாததால் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வருகிறது.
புதிய கட்டிடத்தில் வகுப்புகள்
தற்போது எச்.பி.எப். பகுதியில் நிர்வாகக் கட்டிடம், வகுப்பறைகள், ஆய்வகம் என 4 கட்டிட பணிகள் முடிந்துள்ளன. மேலும் மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து புதிய கட்டிடத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தது. கல்லூரி டீன் மனோகரி முன்னிலையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. பின்னர் கல்லூரி மாணவர் கள் 2 அரசு பஸ்கள் மூலம் தற்காலிக விடுதிகளுக்கு திரும்பினர்.
136 மாணவர்கள்
இதுகுறித்து கல்லூரி டீன் மனோகரி கூறும்போது, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் 136 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். புதிய கட்டிடத்தில் விடுதி கட்டிட பணிகள் நிறைவடையாததால் மாணவிகள் ஊட்டி மலை மேலிட பயிற்சி முகாமிலும், மாணவர்கள் அரசு கலைக் கல்லூரி விடுதியிலும் தங்கி உள்ளனர்.
புதிய கட்டிட ஆய்வகத்துக்கு மாணவர்கள் அழைத்து செல்லப் பட்டு வகுப்புகள் நடக்கிறது. இங்கிருந்து கல்லூரிக்கு சென்று வர காலை, மதியம் என தலா 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 136 மாணவ-மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story