குன்னூர் காட்டேரி பூங்காவில் 1 ¾ லட்சம் மலர்நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்


குன்னூர் காட்டேரி பூங்காவில் 1 ¾ லட்சம் மலர்நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 17 March 2022 8:52 PM IST (Updated: 17 March 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

கோடைசீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் 1¾ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

குன்னூர்

கோடைசீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் 1¾ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. 

காட்டேரி பூங்கா

மலைமாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு ஏப்ரல், மே மாதத்தில் முதல் சீசனும், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 2-வது சீசனும் நிலவி வருகிறது. 

இந்த 2 சீசன்களிலும் சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்களில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. 

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் காட்டேரி பூங்கா உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். 

1¾ லட்சம் நாற்றுகள் நடவு

இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனால் இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

 அதன்படி 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி  தொடங்கியது. இந்த பணியை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரேமாவதி தொடங்கி வைத்தார். 

பின்னர் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மலர் நாற்றுகளை நட்டனர். இதில் பிளாக்ஸ், சூரியகாந்தி, ஆன்டிரினம், கோணியா, பால்சம், பெகோணியா, டையாந்தஸ், சால்வியா, குட்டை ரக சால்வியா, ஜினியா, டெல்பினியம், பிரான்ச் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த மேரி கோல்ட் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு வகை

இந்த மலர் நாற்றுகளுக்கான விதைகள் ஜெர்மனி, பிரான்ச், நெதர்லாந்து போன்ற வெளிநாடுகள், காஷ்மீர், கொல்கத்தா போன்ற பகுதிகளில் இருந்தும் பெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது. 


Next Story