வங்கியில் அடகு நகையில் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


வங்கியில் அடகு நகையில் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 17 March 2022 9:14 PM IST (Updated: 17 March 2022 9:14 PM IST)
t-max-icont-min-icon

வங்கியில் அடகு நகையில் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொங்கலூர்:
பொங்கலூர் அருகே கேத்தனூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் அடகு நகையில் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். 
பொதுத்துறை வங்கி
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கேத்தனூரில் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி கிளை உள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த சுதா என்பவர் மேலாளராகவும், நகை மதிப்பீட்டாளராக திருப்பூரை சேர்ந்த சேகர் (வயது 55) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள். 
இந்த வங்கியில் நகைகடன் பெற்ற விவசாயிகள் அவற்றை மீட்டபோது அதில் எடை குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புதிதாக நகை வாங்கும்போது குறிப்பிட்டிருந்த எடையும், வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது. 
முற்றுகை
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேத்தனூர் வங்கி கிளைக்கு சென்று கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம்  கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட நகை கடன் பெற்ற விவசாய குடும்பத்தினர் அந்த வங்கி முன்பாக கூடி அளவு குறைக்கப்பட்ட நகைக்கு இழப்பீடு வழங்க கோரி வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர்  மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
நகை மதிப்பீட்டாளர் கைது 
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள்  காமநாயக்கன் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில் நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து  போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு  கேமராக்களை ஆய்வு செய்தனர். 
அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளில் எந்த அளவிற்கு நகைகள் காணாமல் போய் உள்ளது? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். 
மேலும் வங்கிக்கு சூலூர் சட்டமன்ற தொகுதி கந்தசாமி எம்.எல்.ஏ., பல்லடம் தாசில்தார் ஆகியோர் வந்து வங்கி அதிகாரிகளிடமும் மற்றும் பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கேத்தனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடகு வைத்த நகைகளை குறைந்த அளவு வெட்டி எடுத்து திருடியதாக நகைமதிப்பீட்டாளர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். எனவே இந்த வங்கியில்  நகையை ஈடாக வைத்து கடன் வ ாங்கி உள்ள வாடிக்கையாளர்களின் அனைத்து நகைகளையும் ஆய்வு செய்தால்தான் எத்தனை கிராம் நகை திருட்டப்பட்டுள்ளது தெரியவரும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் அனைத்து நகைகளின் எடையை சரிபார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story