ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
ஊட்டி
ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
ஊட்டி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற் பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், கோவிலுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் வேண்டும்.
அடுத்த மாதம் 19-ந் தேதி தேரோட்டம் அன்று சுவாமி திருவீதி உலா லோயர் பஜார், மெயின் பஜார், காபிஹவுஸ் வழியாக கோவிலை வந்தடையும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்தை சரிசெய்யவும் வேண்டும். தேரோட்டம் அன்று தீயணைப்பு வாகனத்துடன் மீட்புக்குழு பணியில் ஈடுபட வேண்டும்.
உணவுகள் பரிசோதனை
மேலும் தேரோட்டம் அன்று பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்களும் இயக்க வேண்டும். கோவிலில் அன்னதானம், குடிநீர் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்தல், கழிவு மற்றும் குப்பைகளை அகற்றுதல், தேர் செல்லும் பாதையான மார்க்கெட் நுழைவுவாயிலில் உள்ள நகராட்சிகள் கழிப்பிடங் களை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை கோவிலை சுற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை தேரோட்டத்திற்கு முன்பு தேரை பார்வையிட்டு உறுதித் தன்மை குறித்த சான்றிதழ் வழங்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், கோவில் செயல் அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story