லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்


லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 17 March 2022 9:19 PM IST (Updated: 17 March 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்

குடிமங்கலம்:
குடிமங்கலம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.6ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 
பட்டா மாறுதல்
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செஞ்சேரிபுத்தூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 37). இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ெதாட்டம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் தோட்டம் ஒன்றை பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (வயது 47) என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார். இதையடுத்து பட்டா பெயர்மாறுதல் செய்து தொடர்பாக ஜெயராமன், தொட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமியை அணுகியுள்ளார். அப்போது  பட்டா மாறுதலுக்கு வேலுசாமி ரூ. 6 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுத்து பட்டா பெயர்மாற்றம் செய்ய ஜெயராமன் விரும்பவில்லை.  இதனைத்தொடர்ந்து திருப்பூர்மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் ஜெயராமன் புகார் தெரிவித்தார். 
கிராம நிர்வாக அதிகாரி கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயராமனிடம் கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலர் வேலுசாமியிடம் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அந்த பணத்தை எடுத்துக்ெகாண்டு ஜெயராமன்  நேராக தொட்டம்பட்டி சென்று கிராம நிர்வாக அதிகாரி வேலுச்சாமியிடம் ரூ.6500-ஐ லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் வேலுசாமியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.6500-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story